கட்லெட்
தேவையான பொருட்கள் :உருளை கிழங்கு - மூன்று
காரட் - இரண்டு
பீட்ரூட் - பாதி
பெ. வெங்காயம் - ஒன்று
பட்டாணி (அ) சன்னா- ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
கரம்மசாலா -இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-இரண்டு குழிகரண்டி
பிரட் கிராம்ஸ் -சிறிதளவு
கான் பளார்- சிறிதளவு
செய்முறை :
முதலில் வாணலில் ஒரு குழிகரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும் . பின் துருவிய காரட் மற்றும் பீட்ரூட் ஐ போட்டு வதக்கவும் . இவை நன்றாக வெந்தவுடன் உருளை கிழங்கு ஐ வேக வைத்து மசித்து அதில் நனைத்து நனைத்து கரைசலில் , தேவையான உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும் .
இகலவை ஐ சிறிது நேரம் ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் . கான் பளார் (நன்கு - ஆறு டேபிள் ஸ்பூன் ) ஐ நீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். உருண்டை ஐ லேசாக வடை போல் தட்டி கான் பளார் கரைசலில் நனைத்து எடுத்து பிரட் கிரம்ஸ் இல் புரட்டி எடுத்து தோசை கல்லில் எண்ணெய்
ஊற்றி கட்லெட் ஐ போட்டு இரு புறமும் சிவந்ததும் எடுக்கவும் .