Tuesday, January 25, 2011

கேரட் அல்வா


தேவையான பொருட்கள் :-
கேரட் (துருவியது ) - அரை கப்
சக்கரை -கால் கப்
பால் - இரண்டு கப்
நெய் -தேவையான அளவு
முந்திரி -தேவையான அளவு
ஏலக்காய் -தேவையான அளவு

செய்முறை :-
முதலில் பாலை காய்ச்சி கொள்ளவும்.பிறகு வாணலில் காய்ச்சிய பாலை ற்றி அதில் துருவிய காரட்டை போட்டு நன்றாக வேக வைக்கவும் .கேரட் நன்றாக வெந்ததும் சக்கரை சேர்க்கவும் .நன்றாக கிளறவும் .பிறகு சிறிது நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். வாணலில் ஒட்டாமல் வரும் போது ஏலம் ,வருத்த முந்திரி தூவி இறக்கவும் .


No comments:

Post a Comment