தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:-தக்காளி - மூன்று
பூண்டு - நான்கு பல்
இஞ்சி - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
உ. பருப்பு, க.பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - இரண்டு குழிகரண்டி
உப்பு -தேவையான அளவு
மிளகாய்தூள் -ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை :-
அரிசி ஐ வடித்து சாதத்தை தயராக வைத்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊத்தி அதில் கடுகு , உ.பருப்பு, க.பருப்பை சேர்க்கவும் .பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் . வெங்காயம் சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு மேலும் வதக்கவும் .பின் தக்காளி ஐ அரைத்து அதில் சேர்க்கவும். உப்பு,மிளகாய்த்தூள் ,கரம்மசாலா சேர்த்து மீண்டும் வதக்கி சாதத்தை அதில் பொது கிளறவும் . சுவையான தக்காளி சாதம் ரெடி