உருளைகிழங்கு பொடிமாஸ்
தேவையான பொருட்கள் :-உருளைகிழங்கு - மூன்று
கடுகு -இரண்டு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -நான்கு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை ;-
உருளைகிழங்கை வேக வைத்து பொடித்துக் கொள்ளவும் .கடாயில் எண்ணெய் உற்றி கடுகு உளுத்தம்பருப்பை போடவும் . சிவந்ததும் பச்சை மிளகாய்,
கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .பின் பொடித்த உருளைகிழங்கை போட்டு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி இறக்கவும் .
உருளைக்கிழங்கு கார பொரியல்
தேவையான பொருட்கள் :-உருளைக்கிழங்கு -மூன்று
வெங்காயம் -ஒன்று
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -சிறிதளவு
க.பருப்பு -சிறிதளவு
கருவேப்பிலை -சிறிதளவு
உப்பு- தேவையானஅளவு
மிளகாய்த்தூள் -தேவையானஅளவு
க.எண்ணெய்-ஒரு குழி கரண்டி
செய்முறை :-
உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம்பருப்பு ,க.பருப்பு ,கருவேப்பிலை ஐ தாளிக்கவும்.பின் தேவையான உப்பு ,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் .அதன் பின் மசித்த உருளைகிழங்கை சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும் .
முட்டைகோஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:-
முட்டைகோஸ் -ஒன்று
வெங்காயம்-ஒன்று
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -ஒரு டீஸ்பூன்
க .பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய்-ஒரு குழிகரண்டி
வெங்காயம்-ஒன்று
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -ஒரு டீஸ்பூன்
க .பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
உப்பு- தேவையானஅளவு
பச்சை மிளகாய் - இரண்டு கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய்-ஒரு குழிகரண்டி
செய்முறை:-
முட்டைகோஸ் ஐ பொடியாக நறுக்கி ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் , மிளகாய்தூள் சேர்த்து சிறிது தண்ணீர்ஐயும் சேர்த்து வேகவைத்து தனியாகயெடுத்து வைக்கவும் . கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் க. பருப்பை போடவும்.அது சிவந்ததும் பச்சை மிளகாய் , கருவேப்பிலை வெங்காயம் சேர்க்கவும் . வெங்காயம் சிவந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும் . பிறகு அதில் வெந்த கோசை ஐ சேர்த்து பிரட்டவும் .பின் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது வதக்கி இறக்கவும்.
காரட் சாலட்
(இதனை நீங்கள் அடுப்பை பயன்படுதாமலயே செய்யலாம் . சுவையும் நன்றாக இருக்கும் . ரசம் மற்றும் சாம்பார் சாததிற்கு ஏற்ற sidedish இது.)தேவையான பொருட்கள்:-
காரட் - ஒரு கப் (துருவியது )
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சை -அரை மூடி
பச்சை மிளகாய் - மூன்று
செய்முறை:-
துருவிய காரட்இல் அரை மூடி எலுமிச்சை பழசாற்றையும் உப்பையும் பொடியாக நறுக்கிய ப. மிளகாயையும் சேர்த்து கலக்கி பரிமாறவும்.